Monday, September 3, 2012

கிறிஸ்தவத்தில் இருக்கும் கிறிஸ்து

இந்தியாவின் பிரபல கிறிஸ்தவ பணியாளரான சாது சுந்தர்சிங் என்பார், இந்து மதக் கல்லூரியொன்றுக்கு விஜயம் செய்தபோது, உலக மதங்கள் பற்றிய பாடத்திற்கான விரிவுரையாளர் ஒருவர் அவரிடம், “உமது பழைய மதத்தில் இல்லாத எதனை நீர் கிறிஸ்தவத்தில் கண்டு கொண்டீர்? எனக் கேட்டபோது, “அங்கு கிறிஸ்து இருக்கிறார்“ என்று பதிலளித்தார்

சாது சுந்தர்சிங்கின் பதிலைக் கேட்ட அவ்விரிவுரையாளர், “அது எனக்குத் தெரியும். முன்னர் உம்மிடம் இல்லாத அல்லது நீர் அறியாதிருந்த எதனை கிறிஸ்தவத்தில் கண்டீர்? எனக் கேட்டார்.“கிறிஸ்வத்தில் நான் கண்டு கொண்டது இயேசுகிறிஸ்துவையே“ என சாதுசுந்தர் சிங் பதிலளித்தார்.

இயேசுகிறிஸ்து உலக மதங்கள் அனைத்திலும் இருக்கிறார் எனக் கருதும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வரும் இக்காலத்தில் சாது சுந்தர்சிங்கின் அனுபவரீதியான பதில், கிறிஸ்வத்தில் மட்டுமே இயேசுகிறிஸ்து இருக்கிறார் எனும் உண்மையை உறுதிப்படுத்துகிறது.

“நான் கர்த்தர் இது என் நாமம். என் மகிமையை வேறொருவனுக்கும் என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்“. (ஏசா. 42:8) எனத் தெரிவித்துள்ள தேவன், விக்கிரக வழிபாடுகளுள்ள மதங்களில் எல்லாம் தன்னைப் பற்றி வெளிப்படுத்தியுள்ளார் எனக் கூறுவது உண்மைக்கு முரணாகவே இருக்கும் என்பதை நாம் ஒருபோதும் மறக்கலாகாது. 

No comments:

Post a Comment