Tuesday, September 4, 2012

இயேசு என் பக்கம்

‘தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?  (ரோமர் 8:31)

நீ மாத்திரம் தனியே உல்லாசப் பிரயாணம் போகமுடியாது” என்று தனது தங்கையிடம் கூறினான் மோகன். ‘ நீ மிகவும் சிறு பெண் பேசாமல் வீட்டிலேயே இரு’ என்று ஏளனமும் செய்தான். அதனால் அவனுடைய சிறு தங்கை அழ ஆரம்பித்தாள். தன்னுடைய தந்தையாரிடம் ஓடி அப்பா அண்ணன் சொல்கிறான் உல்லாசப் பிரயாணம் போக முடீயாதாம். நான் சிறு பெண்ணாம் என்று அழுதாள்.

அதற்கு அப்பா நீ அண்ணாவிடம் சொல் உல்லாசப்பிரயாணம் போவதா இல்லையா என்பதை அவன் தீர்மானிக் வேண்டியதில்லை. நான் தான் தீர்மானிக்க வேண்டும். என்று நீ உல்லாசப் பிரயாணம் போக வேண்டுமென்று நான் விரும்புகிறேன் என்று கூறினார்.இதைக் கேட்டவுடன் சிறுமிக்கு வந்த மகிழ்ச்சிக்க அளவேயில்லை. மோகனைப் பற்றி அவள் கவலைப்படவே இல்லை.

ஏனென்றால் அப்பா அவள் பக்கம் என்று அவளுக்கு நன்றாக புரிந்துவிட்டது. அண்ணா அப்பா சொல்லிவிட்டார் நான் போகலாமென்று நீ இனி ஒன்றும் செய்ய முடியாது என்று மோகனிடம் தைரியமாகக் கூறினாள்.

இதே போல்தான் பவுல் என்ற தேவனுடைய மனுதர் தேவனைப்பற்றி கூறும்போது ‘தேவன் என்னோடு கூட இருக்கும் போது நான் ஏன் பயப்படவேண்டும். என்று கேட்டார். சில வேளையில் மனிதர்கள் எம்மை விரோதிக்கலாம். அவர்கள் எம்மைப் பகைத்து எமக்கு தீங்கு செய்யவும் முனையலாம். ஆனால் எல்லாவற்றையும் விட சாத்தானோ நாம் இயேசு சுவாமிக்குள் சந்தோசமாக இருப்பதை விரும்பாதவனாகவே இருக்கின்றான்.ஆனால் இயேசு சுவாமி எம்மை நேசிக்கிறார். எமக்காக மரித்தார் எமக்காக இயேசு சுவாமி தம்முடைய உயிரையே பலியாகக் கொடுத்திருக்கும் போது மற்றக் காரியங்களை நிச்சயம் கொடாமலிருப்பாரா?இயேசு சுவாமி தன்னுடைய உயிரையே எமக்காக கொடுத்ததால் அவர் எவ்வளவாக நம்மை நேசிக்கிறார். ஆம் அவர் எம் பக்கம் இருக்கிறார். ஆகவே நம்மை யார் தோற்கடிக்க முடியும்? ஒருவராலும் முடியாது.ஆம் அன்பான நண்பர்களே இயேசு நம்மோடு இருக்கவே விரும்புகிறார். ஆனால் நாம் அவருக்கு இடங்கொடுத்தால் தானே அவர் நம் பக்கம் இருக்க முடியும். நீங்கள் உங்கள் உள்ளத்தை அவருக்கு கொடுத்துள்ளீர்களா? நீங்கள் அப்படி கொடுத்திருந்தால் அவர் உங்கள் பக்கம் இருப்பார். உங்களை விரோதிப்பவர்களை அல்லது சாத்தானைக் கண்டு நீங்கள் பயப்படாதீர்கள்.!உங்களுக்காக தமது உயிரையே கொடுத்த அவர் நிச்சயம் உங்களுக்காய் எதையும் செய்ய தயாராகவே இருப்பார். இன்றே அவரை உங்களுடையவராய் ஆக்கிக் கொள்ளுங்கள். இயேசு சுவாமி உங்கள் பாதுகாப்பாய் இருக்க இன்றே ஜெபியுங்கள்.

2 comments:

  1. ‘தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? (ரோமர் 8:31)




    இயேசுவின் வார்த்தைகள்

    ReplyDelete
  2. கிறிஸ்து இயேசுவுக்குள் அன்பான நண்பர்களுக்கு இந்த மாத (அக்டோபர் 2013) ஜீவ அப்பம் மாத இதழை இலவசமாக பதிவிறக்கம் செய்ய

    http://jeevaappam.blogspot.in/2013/09/jeevaappam-christian-tamil-manthly-magazine-october-2013.html

    ReplyDelete