Tuesday, September 4, 2012

உன்னைத்தான்…

.......தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்க்கு வரவளைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயியும்….. ( 1 பேதுரு 2 : 9 )

நாம் மகிழ்ச்சியாயிருப்பதை இந்த உலகமொ உலகத்தின் அதிபதியோ விரும்புவதில்லை. மகிழ்ச்சியுற வேண்டியவற்றை நாம் சிந்திக்காதபடி பாரங்களை ஏற்றி நம்மை துக்கத்தில் ஆழ்த்துவதுதான் இவ்வுலகத்தின் தந்திரம். நாமும் அநியாயமாக அதற்க்குள் மாண்டுபோகிறோம். வாழ்நாட்க்களை வீணடிக்கிறோம்.

ஒரு பிரசித்திபெற்ற மேடையில் தாலந்துகளுக்கான போட்டி நடந்தது. ஆடம்பரமான பல போட்டியாளர்கள் மேடையேறி மக்கை ஆச்சரியத்தில் மூழ்கடித்தனர். அந்த வரிசையிலே ஒரு பெண் எறினாள். மண்டபத்திலே “ஊஊஊ” என்ற ஒரு சத்தம். இவளால் என்ன செய்யமுடியும் என்ற பரிகாசம்தான். ஆனால்அவள் ஒலிபெருக்கியை கையில் எடுத்து உதட்டருகே கொண்டு சென்றுபோது அந்த பிரமாண்டமான மண்டபமே அமைதியானது. இப்படி ஒரு குரலா? எல்லோரும் இருக்கையை விட்டு எழுந்து விட்டனர். கரகோஷம் வானைப்பிளந்தது. மத்தியஸ்தர்களும் அசைந்துவிட்டனர். ²இவளால் முடியாதே² என்று நினைக்த்தக்க இந்த எளிமையான பெண்ணின் வாயிலிருந்து இப்படியொரு அற்புத பாடலா? 2009 ம் பிரித்தானியாவில் நடந்த உண்மை சம்பவம் இது.

நீங்களும் நானும்கூட மிக எளியவர்கள் தான். உலகம் எங்களை கண்டிராது. குடும்பத்திலும் நம்மை கணக்கெடுக்காதிருக்கலாம். இவையெல்லாம் கிறிஸ்துவின் அழகு நம்மில் ஊற்றெடுத்துப் பாயும் வரைக்கும்தான் அந்த அழகு மாத்திரம் நம்மில் தெரியுமானால் இந்த உலகம் தன் முக்கில் விரல் வைக்கும். அப்படித்தான் தேவன் நம்மை திட்டமிட்டிருக்கிறார். நாம் வாழ்வு என்னும் மேடையில் நிற்கிறோம். நமது குடும்பத்தார் நண்பர்கள் சபை மக்கள் நம்மை அற்பமாய் நினைக்கிறவர்கள். யாவருக்கும் முன்னிலையில் நாம் நிற்கிறோம். இவனா! இவளா! இவனைப்பற்றி எனக்குத் தெரியாதா? இவளின் கடந்த கால நாற்றம் தெரியாதா? இப்படியாக எத்தனையெல்லாம் பேசுவார்கள். ஆனால் கிறிஸ்துவின் அன்பும் கிருபையும் நமது வாழ்விலிருந்து புறப்பட்டு பாயும் போது நிச்சயமாய் இந்த உலகமே எழுந்து நிற்கும். பேதுரு எழுதியவார்த்தைகள் எவ்வளவு மகத்தானவை. நம்மில் வெளிப்படுகின்ற கிறிஸ்துவின் அழகு ஜோடிக்கப்பட்டதல்ல. அது வாழ்வின் அனுபவம் இயேசு கிருபையாய் என்னை துக்கிவிட்ட அனுபவம் ஏராளமான அறிவாளிகள் மத்தியில் தமது புண்ணியங்களை அறிவிக்க தெரிந்தெடுத்தாரே அந்த கிருபையின் அனுபவம் எளியவர்களாகிய நம்மைத் தமது சன்னிதானத்தில் ராஜரீக ஆசாரியக் கூட்டமாக்கினாரே அந்த அனுபவம் இந்த கிருபை ஒன்றே போதுமே வாழ் நாள் முழுவதும் நாம் மகிழ்ச்சியாயிருக்க!



“பிதாவே உமது மகத்துவங்களை அறிவிக்க நீர் என்னையா தெரிந்தெடுத்தீர். இதை நினையாமற் போனேன். என்னை ஆட்கொள்ளும் ஜயா ஆமென்.”

No comments:

Post a Comment